1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (12:36 IST)

தமிழக அரசின் ரூ..2000 சிறப்பு நிதி திட்டம் : உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதாக அறிவித்தார். இதற்காக திட்டத்தை  முறைப்படுத்துவதற்காக ரூ.1200 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. 
இதை மக்கள்  பலரும் வரவேற்றார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் இது தேர்தலுக்காக மக்களை கவரும் விதத்தில் அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்கள்.
 
இந்நிலையில் விழுபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.ரூ.2000 சிறப்பு நிதி  வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு என்று சொல்லிக் கொண்டு அத்தனை மக்களுக்கும் தருகிறார்கள் எனக்  கூறியிருந்தார்.
 
 மேலும் நிதியுதவியில் 7 பேர் கொண்ட குழு என்று கூறிவிட்டு 9 பேர் கொண்ட குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசாணை திருத்தியது பற்றி மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
 
இவ்வழக்கின் விசாரணை முடிந்ததை அடுத்து நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பயனாளிகல் கண்டறிய சிறப்பான நடைபெறுவதாகக் நீதிபதிகள் கூறினர். மேலும் ரு. 2000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறி கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.