1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (14:40 IST)

கிழிந்த நிலையில் ரூ.1000 நோட்டுகள் குப்பைத் தொட்டியில் கிடந்ததால் அதிர்ச்சி

திருச்சியை அடுத்த உறையூரில் குப்பைத் தொட்டி ஒன்றில் ரூ.1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்காக, மத்திய அரசு கொடுத்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது.

ஆனாலும், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருப்பவர்கள், அதை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கிழிந்த நிலையில் துண்டு துண்டாக ரூ.1000 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.