1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (10:26 IST)

முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை.. பயனாளிகள் மகிழ்ச்சி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது என்பதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த மாதம் 14 மற்றும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் முன்கூட்டியே அதாவது ஜனவரி 10ஆம் தேதியே மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து இந்த திட்டத்தின் பயனாளிகள்  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran