முருகனுடன் தொடர்பில் இருந்தது சிவகார்திகேயன் பட நடிகையா? - திடுக்கிடும் தகவல்!

Papiksha| Last Updated: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (11:38 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற நூதன திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் முருகன்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். இவர்  முருகனின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 


 
போலீஸ் விசாரணையில் கொள்ளையடித்த நகை, பணத்தை வைத்து  முருகன் தெலுங்கு சினிமாவில் படங்களைத் தயாரித்து வந்ததாக சுரேஷ் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதில் சுரேஷை  நடிகராக நடிக்க வைக்க திட்டமும் தீட்டியுள்ளார். முதலில்  ஆத்மா என்ற படத்தினை முருகன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அதன்பின்னர் அந்த படத்தினை கைவிட்டுவிட்டு மான்ஸா என்ற பெயரில் மற்றொரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் முருகன்.
 
அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒரு துணை நடிகைக்கு  ரூ 50 லட்சம் பணம் கொடுத்து கமிட் செய்ததாகவும்  ஆனால், பேசியபடி  50 லட்சத்தை தராததால் அந்த நடிகை முருகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து திருச்சியில் கொள்ளையடித்த பாதி நகைகளை அந்த நடிகையிடம் கொடுத்து புதிய படத்தில் கமிட் செய்ததாகவும் கூறப்படுகிறது. நகை கடை உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட முருகன், சம்பளத்துக்கு பதிலாக நகைகளை கொடுத்ததால் கொஞ்சமும் சந்தேகம் அடையாமல் அந்த நாயகி வாங்கி வைத்துக் கொண்டாராம்.  இந்நிலையில் தற்போது அந்த நடிகை சிவகார்திகேயன் படத்தில் நடித்த ஒரு பிரபல நடிகை என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. .


இதில் மேலும் படிக்கவும் :