தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!
தமிழக ஆளுநர் பதவியை ஏற்றார் ஆர்.என்.ரவி!
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார்.
இந்த நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி அவர்கள் இன்று தமிழகத்தின் 26-வது ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னர் ஆர்.என்.ரவி நாகாலாந்து ஆளுநராகவும், தேசியபாதுகாப்பு துணை ஆலோசகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.