1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (17:39 IST)

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமம்: நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் தரப்பு வாதம்

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து நடிகர், பாஜக நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக ஆர்.கே.சுரேஷ் தரப்பு வாதம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
முன்னதாக ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் சம்மன்அனுப்பியும் சுரேஷ் ஆஜராகாததால்  நடிகர் ஆர்.கே. சுரேஷ் சொத்துகளை முடக்க நடவடிக்கை உத்தரவிடப்பட்டது. 
 
மேலும் ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran