வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (11:14 IST)

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் கடத்தல்: அதிர்ச்சி சம்பவம்..!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வந்தவர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆருத்ரா மோசடி வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் கைதான அரியலூரைச் சேர்ந்த செந்தில்குமார் சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்
 
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன், மதுரவாயலில் உள்ள நண்பர் இல்லத்திற்கு சென்ற செந்தில்குமாரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் செந்தில் குமார் கடத்தலில் தொடர்புடைய 7 பேரை கைது செய்த மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை
 
கைதான நபர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran