1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:00 IST)

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்டுக்களாக மாற்றப்படும்: அமைச்சர் சேகர் பாபு

பயன்பாட்டுக்கு இல்லாத கோவில் நகைகள் தங்க பிஸ்கட்டுகள் ஆக மாற்றப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஒரு சில அமைச்சர்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் என்பதும் அதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் என்றால் யார் என்றே பலருக்கு தெரியாத நிலையில் இன்றைய அறநிலை துறை அமைச்சர் தினமும் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஏக்கர் கணக்கில் கோவில் நிலங்களை மீட்டு உள்ள இவர் தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்குள் 100 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் பயன்பாட்டில் இல்லாத கோவில் நகைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்படும் என்றும் அந்த தங்க பிஸ்கட்டுகள் வைப்புநிதியில் வைக்கப்பட்டு அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் திருப்பணிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்