1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (12:00 IST)

கஜாவைத் தொடர்ந்து அடுத்த ரெட் அலர்ட்? வெதர்மேன் ரிப்போர்ட்

கஜா ஏற்படுத்திய பெரும் சேதத்திலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் ரெட் அல்ர்ட்க்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
கஜாபுயல் ஏற்படுத்திய சேதத்தால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. 
 
மக்கள் இதிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், இன்றும் நாளையும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் மிக, மிக கனமழை பெய்யும். இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விட வாய்ப்பிருக்கிறது.
 
கஜா புயல் பாதித்த நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வெதர்மேன் கூறியுள்ளார்.