அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரொனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அவை:
டீக்கடைகள் மற்றும் சாலையோர உணவகங்கள் காலையில் 6 முதல் இரவு 7 மணி அவ்ரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலணிகள் விற்பனைக் கடைகள், பாத்திரக் கடைகள்,பேன்ஸி, போட்டி, வீடியோ , சலவைக் கடைகள், தையல்கடைகள் , அச்சககங்கள் போன்றவை காலை 9 மணி முதல் மாலை 7 மணி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வானக விற்பனையாளர்களது வாகனம் பழுதுபார்க்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செல்போன் மற்றும் அதன் விற்பனைக் கடை மையங்கள், கணினி, மென்பொருட்கள் விற்பனை மையங்கள் உதிரிபாகங்கள் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் அத்தியாசியத்துறைகள் 100% இயங்கவும் இதர அரசுத்துறை அலுவலங்கள் 50% பணியாளர்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பூங்காக்கள் விளையாட்டுத் திடல்களும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கல், எடிஎம் சேவைகள் , உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளி , கல்லூரி, பல்கலை, பயிற்சி நிலையங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இ - பார்ஸ் மூலம் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக் கட்டுமானப் பணிகளும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன்கள், அழகு நிலையங்கள் கால 6 முதல் இரவு 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 பேர் மட்டும் மட்டுமே பங்கேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.