1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (18:48 IST)

சூப்பர் ஸ்டாருடன் இந்தியில் நடிக்கும் நயன்தாரா? இயக்குநர் இவர்தான் !

பாலிவுட் படத்தின் நடிகை நயன்தாரா எண்ட்ரீ ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அட்லீ. இவர் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் அட்லீ கதை சொல்லி உள்ளதாகவும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷாருக்கான் -அட்லீ படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளாதப் புதிய தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே, அட்லீ தனது முதல் படமான ராஜா ராணியில் நயன்தாரா நடித்துள்ள நிலையில் இப்படத்திலும் அவர் நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மேலும், தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருவதால் இப்படப்பிடிப்பு முடிந்த பின் அட்லி – ஷாருக்கான் இணையும் பட ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் 2 கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.