1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (22:11 IST)

தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிப்பது கண்டனத்துக்குரியது. - விஜயகாந்த்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியரசு தின விழா அணிவகுப்பில், வேலு நாச்சியார், வஉசி போன்ற தலைவர்கள் இடம்பெற்றுள்ள தமிழக  அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது. இதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிப்பது கண்டனத்துக்குரியது என விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிப்பது   கண்டனத்துக்குரியது.

தமிழகத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அதிக பற்று உள்ளதாக கூறும் பிரதமர் மோடி அவர்கள், திருவள்ளுவரை பற்றி பேசுவதும், வணக்கம் தமிழகம் என உரையை தமிழில் தொடங்குவதும்.தமிழர்களையும் தமிழ்நாட்டையும் போற்றக்கூடிய விஷயம்.அதே நேரத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிப்பது கண்டனத்துக்குரியது.இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்