திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (19:33 IST)

பதிவுத்துறை சேவைக்கட்டணம்.. ரசீது ஆவணத்திற்கு ரூ.20ல் இருந்து 200ஆக உயர்வு..!

பதிவுத்துறை கட்டணம் திடீரென உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொது அதிகார ஆவண கட்டணம் 10,000 இருந்து சொத்தில் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்கிறது என்றும் ரசிது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து 200 ஆக உயர்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிகபட்ச முத்திரை தேர்வை கட்டணம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ஆக உயர்கிறது என்றும் தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூபாய் 200 லிருந்து 1000 ஆக உயர்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூபாய் 4000ல் இருந்து ரூ.100000 ஆக உயர்வு என்றும், அனைத்து கட்டண உயர்வும் ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran