தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு...!

Papiksha Joseph| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (11:19 IST)

வடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் துவங்கி தமிழகம், கேரளா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலான மழை பெய்தது. மேலும் மும்பை, ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தற்ப்போது தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு திசையில் இருந்து நிலப்பரப்பை நோக்கி காற்று வீசுவதால் தமிழத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :