புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (12:53 IST)

நடிகை பிரியங்கா தற்கொலை - இதுதான் காரணமா?

தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

 
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 
 
இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரியங்காவிற்கும், அவரது கணவருக்கும் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன போதிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை. தொடக்கத்தில், தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை பிரியங்கா தள்ளி வைத்துள்ளார். அதன்பின், ஒரு நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள அவர் மருத்துவரை நாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சிகிச்சை எடுத்து வந்த அவருக்கும், அவரின் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியங்கா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என அவரின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது.