ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (10:28 IST)

மீண்டும் மருத்துவமனையில் கருணாநிதி - காரணம் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.
 
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கோபாலபுரம் இல்லத்திலிருந்து அவர் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட இருக்கிறது. 4வது முறையாக இந்த கருவி அவருக்கு பொருத்தப்பட இருக்கிறது.
 
இது வழக்காமன பரிசோதனைதான் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.