1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (21:58 IST)

எத்தனை ரஜினி வந்தாலும்.... தமிழக அமைச்சர்கள் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது 15 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதில் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அவர் பெரியார் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிமிட பேச்சுக்கு ஒரு வாரம் தமிழக அரசியல்வாதிகள், ஊடக வாதிகள், சமூக வலைதள பயனாளர்கள் பதில் அளித்துக் கொண்டே இருக்கின்றனர். இன்னும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது 
 
இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் இரண்டு நிமிடம் அளித்த பேட்டியால் இரண்டு நாட்கள் தற்போது தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இரண்டு அமைச்சர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்கள் பேசியபோது ’எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என்றும், எச்சில் துப்பிய பின் துடைத்து கொண்டாலும் துப்பியது துப்பியதுதான் என்றும் பெரியாரைப் பற்றி ரஜினி கூறி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
இதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று அளித்த பேட்டியின்போது ஒரு ரஜினி அல்ல ஆயிரம் ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் ரஜினிக்கு திமுக வேண்டுமானால் பயப்படலாம் அதிமுக பயப்படாது என்றும் இது சாதனை புரிந்த கட்சி என்றும் கூறியுள்ளார்
 
ரஜினி பேசியது குறித்து தொடர்ச்சியாக இன்னும் அரசியல்வாதிகள் பதில் அளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என்று சமூக வலைதள பயனாளர்கள் தற்போது சலித்த தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது