வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (06:56 IST)

தீபாவளிக்கு எந்த சேனல்களில் என்ன புதுப்படம்? வெளியான தகவல்!

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் வர உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தீபாவளிக்கு மனதளவில் தயாராகி வருகின்றன. தீபாவளிக்கு திரையரங்கில் கார்த்தியின் ஜப்பான் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ஜிகர்தனடா 2 ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்நிலையில் தீபாவளிக்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளியன்று அஜித்தின் துணிவு திரைப்படமும், ஜி தமிழ் தொலைக்காட்சியில் விஷால் எஸ்ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன. சன் தொலைக்காட்சியில் ஜெயிலர் திரைப்படமும், விஜய் தொலைக்காட்சியில் மாமன்னன், பிச்சைக்காரன் 2 மற்றும் போர்த்தொழில்  ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.