வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:38 IST)

ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு மாதம் ரூ.4000.. ராகுல் காந்தி அறிவிப்பு..!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு மாதம் ரூ.4000 ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. குறிப்பாக தெலுங்கானா மாநிலத்திற்கு நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற உள்ளதை எடுத்து அங்கு காங்கிரஸ், பாஜக மற்றும்  முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன

இந்த நிலையில் நேற்று தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு மாதம் 4000 வழங்குவோம் என்றும் அதில் ரூ.2500 பெண்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும் என்றும் கேஸ் சிலிண்டர் மானிய விலையில் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் ரூபாய் ஆயிரத்துக்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்

மேலும் தெலுங்கானாவில் ஊழல் அரசை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் மக்களுக்கான ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Edited by Siva