திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (13:20 IST)

புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த பெற்றோர்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை பெற, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அப்போது  “கையெழுத்திட விருப்பமா?” என்று நீதிபதி கேட்டார். ஆனால் ராம்குமார் “கையெழுத்திட விருப்பமில்லை. நான் சுவாதியை கொலை செய்யவில்லை. போலீசார் பொய்யாக இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர்.  மேலும், நான் தங்கியிருந்த விடுதியில் உள்ள ஏட்டில் நான் கையெழுத்திட வில்லை  என்று கூறியதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, ராம்குமாரை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.


இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை, அவரது பெற்றோர் பரமசிவம்- புஷ்பம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.