செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (13:10 IST)

உண்மையான குற்றவாளியை காப்பாற்ற என்னை கைது செய்துள்ளனர் : ஜாமின் மனுவில் ராம்குமார் புகார்

திடீர் திருப்பமாக, சுவாதி கொலை வழக்கில், ராம்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இந்த கொலைக்கும், ராம்குமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தெரிவித்துள்ளார்.


 

 
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், செங்க்கோட்டையை ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தன் காதலை ஏற்காததாலும், தன் உருவத்தை பற்றி இழிவாக பேசியதாலும் சுவாதியை கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
 
கைது முயற்சியின் போது, தனது கழுத்தை அறுத்துக் கொண்ட ராம்குமாருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் சென்னை கொண்டுவரப்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
அவர் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் போலீசாரிடம் அவ்வப்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம், ராம்குமார் சார்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
திடீர் திருப்பமாக, இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், நீதிமன்றம் காலக்கெடு விதித்ததால், உண்மையான குற்றவாளியை காப்பாற்றுவதாற்காக போலீசார் தன்னை கைது செய்துள்ளனர் என்றும் ராம்குமரின் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று ராம்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.