1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2016 (13:09 IST)

சிறையில் பித்து பிடித்த மனநிலையில் ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் யாரிடம் பேசாமல் மவுனமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சுவாதி கொலை வழக்கில், குற்றவாளியாக கருதப்படும் ராம்குமார் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கழுத்தில் இருக்கும் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால், சிறை வளாகத்தின் மருத்துவமனை பகுதியில் உள்ள தனி அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
 
கைது முயற்சியின் போது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது போல், மீண்டும் சிறையில் ஏதும் அவர் செய்து விடக்கூடாது என்று சிறை அதிகார்கள்  மிகுந்த கவனத்துடன் அவரை கண்கானித்து வருகின்றனர். அவரின் அறைக்கு அருகே 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
சிறையில் இருக்கும் ராம் இருக்கும் யாரிடம் எதுவும் பேசுவதில்லை. மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுகிறார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.