ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மனு
ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது குறித்து ராம்குமார் வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டாக சிறைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனையில் ராம்குமார் தரப்பு வழங்கறிஞர் பல்வேறு கோரிக்கைகளை முனவைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை 5 பேர் கொண்ட நீதிபதிகள் விசாரணை செய்தனர். ஆனால் அனைவரும் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி தலைவர் ராம்குமார் பிரேத பரிசோதனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அலோசனை வழங்கினார்.
இதையடுத்து இன்று ராம்குமாரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.