பொய் வழக்கென கூறி கையெழுத்திட ராம்குமார் மறுப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:29 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரின் கையெழுத்து மாதிரியை பெற அனுமதிக்க வேண்டும் என போலீசார் எழும்பூர் 14வது நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராம்குமாரை வியாழனன்று ஆஜர்படுத்தி கையெழுத்து மாதிரியை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.
 
இதனையடுத்து ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி கோபிநாத், ராம்குமாரிடம் கையெழுத்து போட சொன்னார்.
 
ஆனால், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறியுள்ள ராம்குமார் கையெழுத்து போட மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :