பிரபல நடிகர் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி?: அருகில் இருந்து கவனிக்கும் நளினி?

பிரபல நடிகர் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி?: அருகில் இருந்து கவனிக்கும் நளினி?


Caston| Last Modified திங்கள், 7 நவம்பர் 2016 (09:31 IST)
பிரபல நடிகரும் நட்சத்திர பேச்சாளருமான ராமராஜன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அவரை அருகில் இருந்து மனைவி நளினி கவனிப்பதாகவும் கூறப்படுகிறது.

 
 
தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்து வீழ்ச்சியடைந்த ஒரு நடிகர் ராமராஜன். இவர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தனது காதல் மனைவியான நளினியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்தார்.
 
அதிமுக கூட்டங்களில் பங்கேற்று பேசிவந்த ராமராஜன் தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மிகவும் மனமுடைந்து போன ராமராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது.
 
இதனையடுத்து அவரது வீட்டு உரிமையாளர் ராமராஜனின் மனைவியான நளினிக்கு தகவல் கொடுத்துள்ளார். வேண்டாம் என்று விவாகரத்து செய்த நளினி தான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அருகில் இருந்து கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :