செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (18:03 IST)

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.15க்கு விற்க போகிறேன்: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தகவல்..!

மூலிகைப் பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறும் ராமர் பிள்ளை விருதுநகரில் பெட்ரோல் ஆலை அமைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்க்கு விற்க போவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமர்பிள்ளை, ‘1999 ஆம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று ஆலை தொடங்கி மூலிகை பெட்ரோல் தயாரித்து ஒவ்வொரு லிட்டருக்கும் அரசுக்கு வரி செலுத்து பெட்ரோல் விற்பனை செய்தேன்.
 
ஆனால் அது மூலிகை பெட்ரோல் அல்ல, போலி பெட்ரோல் என வழக்கு தொடரப்பட்டது. என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் போய் என நிரூபித்து விட்டேன். விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி ஆலை தொடங்கி 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் எங்களது புதிய கண்டுபிடிப்புக்கும், புதிய ஆலை தொடங்குவதற்கும் ஏராளமான முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran