1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:31 IST)

தமிழக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி: தவறுதலாக உளறிய ராம மோகனராவ்!

தமிழக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி: தவறுதலாக உளறிய ராம மோகனராவ்!

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்பதற்கு பதிலாக தமிழக முதல்வர் மம்தா பானர்ஜி என கூறினார்.


 
 
சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் ராம மோகனராவ் வீட்டில் துணை ராணவத்துடன் அதிரடி சோதனை நடத்தியது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நிகழ்விற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு ராம மோகனராவ் இன்றையை செய்தியாளர்கள் சந்திப்பின் தொடக்கத்தில் நன்றி கூறினார். அப்போது அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக தமிழக முதல்வர் மம்தா பானர்ஜி என கூறினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு மேற்கு வங்க முதல்வர் என கூறினார்.