வியாழன், 19 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2016 (16:57 IST)

பிரதமர் எதுக்குங்க: பொன்னாரை நாசுக்காக கலாய்த்த ராமதாஸ்!

பிரதமர் எதுக்குங்க: பொன்னாரை நாசுக்காக கலாய்த்த ராமதாஸ்!

பிரதமர் எதுக்குங்க: பொன்னாரை நாசுக்காக கலாய்த்த ராமதாஸ்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியல் விமர்சனம் செய்வதில் நகைச்சுவையாக கருத்துக்கள் கூறுவதில் வல்லவர். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு விஷயங்களுக்கு கருத்து கூறும் அவர் கலாய்க்கவும் தவறுவதில்லை.


 
 
அந்த வகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணான் கூறிய கருத்துக்கு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசு.

 
இந்நிலையில் தமிழகம், கர்நாடகம் ஒருமித்தகருத்துடன் பிரதமரை அணுகினால் காவிரி சிக்கல் தீரும் என பொன்.ராதாகிருஷ்ணான் கூறியிருந்தார். அதனை கிண்டலடிக்கும் விதமாக பதில் கூறிய மருத்துவர் ராமதாஸ், ஒருமித்தகருத்து ஏற்பட்டால் அப்புறம் பிரதமர் எதுக்குங்க என கேட்டுள்ளார்.