1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (05:29 IST)

நடிகர்களை தாக்கும் ராம்குமார் வழக்கறிஞர்!

சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர்.


 
இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கு ராம்குமார் உடலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியதாவது,

“ராம்குமார் கண்டிப்பாக தற்கொலை செய்ய கொள்ள வாய்ப்பில்லை. ராம்குமாரின் மரணத்தில் நிறைய மர்மம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களே கொன்று விட்டு அவர்களே தரும் அறிக்கையை நாங்கள் ஏன் நம்ப வேண்டும். எங்கள் முன் பிரேத பரிசோதனை நடக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு அரசும், ஊடகமும் ஆதரிப்பது இல்லை. ராம்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும். எஸ்.வி.சேகர் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் தான் ராம்குமார் வழக்கை திசை திருப்பி விட்டனர்” என்றார்.