புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:20 IST)

கட்சிகளிடம் டீல்.. பெட்டி வாங்குவது ரஜினி ப்ளான்!? – முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!

தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளிடம் டீல் பேசி பணம் வாங்கவே ரஜினி கட்சி தொடங்கியதாக முன்னாள் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியலில் நுழைவதாக சொன்ன ரஜினி பின்னர் உடல்நல காரணங்களால் பின்வாங்கினார். இந்நிலையில் இனி தான் அரசியலுக்கு வர போவதில்லை என ரஜினி உறுதிபட தெரிவித்த நிலையில் ரஜினி மன்ற நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாக மோசடி செய்ததாக ரீதியில் பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன் சமீபத்தில் மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆர்.எஸ்.ராஜன் “ரஜினி சுயநலம் கொண்டவர். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி பணம் பெறுவது மட்டுமே அவர் நோக்கம். அவர் கட்சி தொடங்குவார் என எண்ணி இதுவரை 13 லட்சம் செலவு செய்துள்ளேன். அதனை திரும்ப கேட்டு வழக்கு தொடரப் போகிறேன்” என தெரிவித்துள்ளார்.