திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (10:30 IST)

தமிழக அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது – முக ஸ்டாலின்!

சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிக்க கூடாது என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ”சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையை அளிக்கிறது. அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் மட்டுமல்லாமல் இதில் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. pஏருக்கு சிலரை கைது செய்துவிட்டு அப்படியே விட்டுவிட கூடாது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அனைவரும் சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் காவலர்களுக்கு எதிராக சாட்சியம் வழங்கியுள்ள கான்ஸ்டபிள் ரேவதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உள்ளிட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.