1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (15:07 IST)

அண்ணாத்த-யின் அரசியல் ஆட்டம்: தமிழருவி மணியனுடன் ரகசிய சந்திப்பு??

தமிழருவி மணியன் இன்று காலை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை  ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், இந்த கூட்டத்தில் கட்சி தொடங்குவதைப் பற்றி ஆலோசனை செய்யவுள்ளாதாகவும், அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் ஏற்கனவே தெரிவித்த நிலையில் இப்போது திடீர் ஆலோசனை கூட்டம் கூட்ட முடிவெடுத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.