திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (16:49 IST)

பாராட்டு மழையில் ஓபிஎஸ் ஆதரவு நட்ராஜ் எம்எல்ஏ!

பாராட்டு மழையில் ஓபிஎஸ் ஆதரவு நட்ராஜ் எம்எல்ஏ!

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்கள் அனைவருக்கும் அந்த தொகுதி மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.


 
 
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு அவர்கள் தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது. இதனால் அவர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான மயிலாப்பூர் தொகுதியை சேர்ந்த நட்ராஜுக்கு அந்த தொகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் எளிய மனிதராக பார்க்கப்படும் அவரை மக்கள் எளிதாக அனுக முடிகிறது.
 
முன்னதாக சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்களை சொகுசு பேருந்தில் அழைத்து சென்று கூவத்தூர் விடுதியில் தங்க வைத்த போது இவர் அங்கு செல்லாமல் தனது தொகுதிக்கு வந்து தனது அலுவலகத்தில் அமர்ந்து மக்களை தினமும் சந்தித்து வந்தார்.
 
மக்கள் பணியை செய்யாமல் மற்ற எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தக்கியிருந்த போது இவர் மட்டும் தன் தனக்கு மக்கள் பணிதான் முக்கியம் என தனது தொகுதி மக்களின் குறைகளை கேட்க தொகுதியில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்தில் உட்கார்ந்து மக்களை சந்தித்து வந்தார்.
 
இறுதியில் எந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என குழப்பம் வந்த போது கூட மக்கள் விருப்பம் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறது என கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியோடு சேர்ந்து வாக்களித்தார். தற்போது அவருக்கு தொகுதி மக்கள் உற்சாகமான வரவேற்பு வழங்கி வருகின்றனர்.