செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (10:22 IST)

ரஜினி பக்கம் தாவும் கட்சியினர்? - அதிமுக, திமுக அதிர்ச்சி

தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக உள்ள அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலிருந்து பலர் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து விட்டார். 1996-ம் ஆண்டு ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்பினர். ஆனால், அதை அவர் தவிர்த்து விட்டார். எனவே, அவரின் பல ரசிகர்கள் அதிமுக, திமுக கட்சியில் இணைந்து விட்டனர். தற்போதுஅவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஜெயலலிதா இல்லாத அதிமுக, கருணாநிதி இல்லாத திமுகவை விரும்பாத பலர் இன்னும் அக்கட்சிகளில் உள்ளனர். திமுகவை பொறுத்தவரை ஸ்டாலினின் தலைமையை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், அதிமுகவின் தலைமையாக செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரும் இருக்கிறார்கள்.
 
எனவே, அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளிலிருக்கும் பலர், ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் போது அதில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் விஜயகாந்தின் உடல் நிலை காரணமாக தேமுதிகவும் தற்போது தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த கட்சியிலுருந்தும் பலர் விலகி ரஜினி பக்கம் தாவலாம் என நம்பப்படுகிறது.
 
எனவே, இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.