ரசிகர் மன்ற பெயரில் தனி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்த ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் கட்சி ஆன்மிக அரசியல் கட்சியாக செயல்படும் என நடிகர் அவ்ர் அறிவித்திருந்தார் என்பதையும் இதனையொட்டு இன்று நேற்று சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவரை சென்று பார்த்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தனது ரசிகர் மன்றத்திற்காக ஒரு வலைதளத்தை தொடங்கியுள்ள ரஜினி, மேலும் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தனி டுவிட்டர் கணக்கு ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இந்த டுவிட்டர் தளத்தில் ரஜினியின் அரசியல் கருத்துக்கள் அவ்வப்போது பதிவு செய்யப்படும் என தெரிகிறது
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த டுவிட்டர் கணக்கு ஆரம்பித்த ஒருசில மணி நேரங்களில் 7000க்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.