1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (18:45 IST)

ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ன சொல்கிறார் தமிழருவி மணியன்?

டிசம்பர் 26ஆம் தேதி 31ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ரஜினி, தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ரஜினியின் அறிவிப்புக்கு முன் எதையும் தெரிவிக்க முடியாது என்று  தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

 
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன் கூறியதாவது:-
 
நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பு வழக்கமான சந்திப்புதான். டிசம்பர் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ரஜினியே அரசியல் வருகை குறித்து அறிவிப்பை வெளியிடுவார். ரஜினி அறிவிப்புக்கு முன்னதாக எதையும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.