வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:03 IST)

சசிகலாவை அவரின் ஜெயலலிதா இல்லத்தில் சந்தித்து பரிசளித்த ரஜினிகாந்த்!

போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வீட்டுக்கு எதிரில் சசிகலா பிரம்மாண்டமாக கட்டியுள்ள  ஜெயலலிதா இல்லம் வீட்டின் கிரகப்பிரவேசம் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவர் போயஸ் கார்டனில் இருந்த தன்னுடைய வேதா இல்லத்தில் தங்கினார் என்பதும் அதே இல்லத்தில் தான் சசிகலாவும் தங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் வேதா இல்லம் அவரது அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியவர்களுக்கு சென்றது. இது குறித்த நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு சசிகலாவும் அவருடைய குடும்பத்தினர் அந்த வீட்டை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் நேற்று ஜெயலலிதா இல்லத்தில் சசிகலா குடியேறினார். அவரை அதே பகுதியில் வசிக்கும் ரஜினிகாந்த் சந்தித்து பரிசளித்தார். அவரோடு சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் வெளியே வந்த அவர் ’வீடு கோயில் மாதிரி இருக்கு. இந்த வீடு சசிகலாவுக்கு எலலா புகழையும், சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும். அதுக்காக நான் ஆண்டவன வேண்டிக்குறேன்” எனப் பேசிச் சென்றார்.