புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (13:33 IST)

ரஜினி ஒரு கோழை: அன்புமணி ராமதாஸ் விளாசல்!

ரஜினி ஒரு கோழை: அன்புமணி ராமதாஸ் விளாசல்!

நடிகர் ரஜினிகாந்துக்கு தைரியம் இருந்தால் அவர் அரசியலுக்கு உடனே வர வேண்டும். வருவேன் என ஏமாற்றிக்கொண்டு இருப்பவர் கோழை என பாமக இளஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


 
 
பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று இரவு நடபெற்ற தாமிரபரணி ஆறு பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவரும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
 
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் பேசினார். தமிழக மக்கள் நடிகர்களை நம்புவதால் தான் நடிகர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
 
நடிகர் ரஜினிகாந்த் எனது திருமணத்திற்கு முன்பே அரசியலுக்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் எனது பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார் என்றார் கிண்டலாக.
 
ரஜினி தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும். வருவேன், வருவேன் என்று ஏமாற்றி கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை ரஜினி வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றார் அன்புமணி ராமதாஸ்.