1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (16:20 IST)

இதற்கு மட்டும் குரல் கொடுப்பீர்களா? - ரஜினியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

சினிமாத்துறையினர் மீது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரி குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்திற்கு இணையத்தில் பலரும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 

 
மத்திய அரசு சினிமாத்துறைக்கு 28 சதவீத வரி விதித்துள்ளது. அதோடு, கேளிக்கை வரியை 30 சதவீதமாக உயர்த்தியது தமிழக அரசு. மொத்தம் 58 சதவீத வரி மிகவும் அதிகம் என தமிழ் சினிமாத்துறையினர் கூறிவருகின்றனர். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.


 

 
இந்நிலையில் இந்த வரிகளை குறைக்க வேண்டும் என நடிகர், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ சினிமாத்துறையில் இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை மனதில் கொண்டு, எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இந்நிலையில், கதிராமங்கலம் உட்பட பல முக்கிய மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தன்னுடைய துறையை சார்ந்த பிரச்சனை என்றதும் குரல் கொடுக்கிறார் என ஏராளமான நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.