தினகரனே திமுகவில் இணையப் போகிறார் – ராஜேந்திர பாலாஜி ஆருடம் !

Last Modified புதன், 11 செப்டம்பர் 2019 (13:20 IST)
அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக கழன்று திமுகவில் சேர்ந்து வரும் நிலையில் தினகரனும் அமமுகவில் சேருவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘வெளிநாட்டுப் பயணத்தை பல்வேறு தரப்பிலும் பாராட்டுகிறார்கள். ஆனால், பொறாமையின் காரணமாக ஸ்டாலின் விமர்சிக்கிறார்’ எனக் கூறினார்.

மேலும் அமமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுகவில் இணைவது குறித்து பேசிய அவர் ‘அமமுகவிலிருந்து புகழேந்தி மட்டுமல்ல தினகரனே தானாக விலகிச் சென்றுவிடுவார். ஜெயலலிதா தனது மரணத்துக்கு முன்பாக அமமுக என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்துங்கள் என்று எங்கேயும் சொல்லவில்லை. தனக்குப் பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றுதான் தெரிவித்தார். தினகரன் நாடகத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.  திமுகவுக்கு செல்வதில் தவறில்லை என்று அவரே கூறுகிறார் அல்லவா.அவரே திமுகவில் இணைந்துவிடுவார். அப்படிதான் எனக்குத் தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :