திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (13:34 IST)

ஸ்டாலின் காங்கிரஸில் சேரப்போகிறார் – ராஜேந்திர பாலாஜி ஆருடம் !

திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் காங்கிரஸில் சேரப்போகிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் ஜனாதிபதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியது கேலிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. இதையடுத்து அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ ஸ்டாலின் காங்கிரஸில் சேரப்போவதாக நான் சொன்னது இப்போது உண்மையாகியுள்ளது. ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ தேசிய அரசியலில் சேர்ந்தால்தான் குடியரசுத்தலைவர் ஆகமுடியும். என்னை ஜனாதிபதி ஆக்குங்கள் நான் காங்கிரஸில் இணைந்து விடுகிறேன் என ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இப்போது அதுபற்றி துரைமுருகனும் கூறியுள்ளார். அவர் ஜனாதிபதி ஆகட்டும் அல்லது அமெரிக்க அதிபராகட்டும். தமிழ்நாட்டை விட்டு சென்றால் சரிதான்’ எனக் கூறியுள்ளார்.