பிரபல தேசிய விருது நடிகை மரணம் !
சினிமாவில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 3 முறை தேசிய விருதுகள் பெற்ற பழம்பெரும் நடிகை இன்று காலமனார். சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாலிவுட்டில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிசா குர்சி கா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரேகா சிக்ரி.
பின்னர் பல்வேறு படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தாமஸ், மம்மோ, பதாய் ஹோ உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சமீபத்தில் ஒரு சீரியலுக்காக நடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு தலையில் அடிபட்டு மூளைப்பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சுரேகா சிக்ரி இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று மாரடைப்பால் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றிக் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.