வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (22:05 IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
 

 
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் மழை வெளுத்து வாங்குகிறது.
 
திருவல்லிக்கேணி, சேத்பட், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
 
இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பல இடங்களில் மழை நீர் தண்ணீர் வடியாமல் குளம் போல் தேங்கிக்கிடக்கிறது.