13 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: மீண்டும் பள்ளிகள் விடுமுறையா?
இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நாளை 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட 13 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வருது என்று வெயில் தோன்றி இருப்பதால் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை மீண்டும் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது