திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (09:02 IST)

இன்று தமிழகம் முழுவதும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

Rain

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே பல பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி. தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K