வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (01:14 IST)

முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்ட சார்ட்: ரயில் பயணிகள் அவதி

ரயில் பெட்டிகளில் ஒட்டப்படும் சார்ட் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் சார்ட் ஒட்டுவதற்கு பதிலாக ரயில் நிலையத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சார்ட் ஒட்டும் முறை சோதனை முயற்சியாக சில நாட்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால் சோதனை முயற்சிக்கு பின்னரும் தொடர்ந்து இதே நிலை நீடிப்பதால் ரயில் பயணிகள் தங்கள் இருக்கையை தெரிந்து கொள்வதில் சிரமம் கொள்கின்றனர். குறிப்பாக வயதான பயணிகள் சார்ட் ஒட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து இருக்கையை உறுதி செய்து கொண்டு பின் மீண்டும் பெட்டிக்கு செல்வதில் மிகுந்த அவதி ஏற்படுவதாக தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் இருந்த இந்த சோதனை முயற்சி திடீரென எழும்பூர் ரயில் நிலையத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் கடைசி நேரத்தில் வரும் ரயில் பயணிகளுக்கு கடும் சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது.