'30 மாணவர்களை நீக்க வேண்டும்': மாநிலக்கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீசார் கடிதம்
ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர் மோதல் விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமென மாநிலக் கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.
ரயில்களில் பயணிக்கும்போது அசம்பாவித செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வேதுறை அறிவித்திருந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் காரணமாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர் மோதல் விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமென மாநிலக் கல்லூரி முதல்வருக்கு ரயில்வேபோலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், மாணவகள் பயணிக்கும் பெட்டிகளில் போலிஸாரும் உடன் பயணித்துக் கண்காணிக்க முடிவு எடுத்துள்ளனர்.