செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:13 IST)

பெண்ணின் வயிற்றில் மருத்துவ கருவிவைத்து தைத்த டாக்டர்.. முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்..!

கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவ கருவியை வயிற்றிலேயே வைத்து தைத்தது பெரும் சர்ச்சையான நிலையில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கேரள முதலமைச்சர் மினராய் விஜயன் அவர்களுக்கு வயநாடு தொகுதியில் எம்பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். 
 
சமீபத்தில் வயநாடு தொகுதிக்கு சென்று இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணை தான் சந்தித்ததாகவும் அவருடைய நிலைமை அறிந்து வேதனைப்பட்டதாகவும்  தனக்கு நீதி வேண்டும் என்று தன்னிடம் ஒரு மனு அந்த பெண் கொடுத்ததாகவும் ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே ரெண்டு லட்சம் ரூபாய் வழங்கியபோதிலும்  கவன குறைவு காரணமாக அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இது குறித்து தாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  
 
இந்த நிலையில் கவன குறைவாக செயல்பட்ட டாக்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மீது  நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva