தொடர்புடைய செய்திகள்
- இந்தியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கை.. ராகுல் காந்தி திட்டம்..!
- இந்தியா கூட்டணிக்கு இவ்வளவு தானா? அப்ப மீண்டும் மோடி உறுதியா? நியூஸ் எக்ஸ் - டி டைனாமிக்ஸ் கருத்துக்கணிப்பு..!
- பாஜகவின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் சிதைந்தது-ப.சிதம்பரம் பேச்சு!
- பட்டாசு தொழிலாளர்களிடம் நடிகர் சரத்குமார் வாக்கு சேகரிப்பு!
- ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் - பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு!
பாஜகவுக்கு 150 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்! ராகுல் காந்தி கணிப்பு!
பாஜகவிற்கு நாடு முழுவதும் 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கணித்துள்ளார்.
நாளை மறுநாள் முதல் இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் செய்து வரும் நிலையில் ராகுல் காந்தி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது பாஜகவுக்கு நாடு முழுவதும் 150 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாஜகவுக்கு 180 இடங்கள் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது உள்ள நிலைமையை பார்க்கும் போது அந்த கட்சிக்கு 150 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நான் பொதுவாக கருத்துக்கணிப்பை நம்புவதில்லை என்றும் ஆனால் தற்போது என் மனதிற்கு இவ்வாறு தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இந்தியா கூட்டணி சிறப்பாக முன்னேறி வருவதாக வருவதாக அனைத்து மாநிலங்களிலிருந்தும் ரிப்போர்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
Edited by Mahendran
