1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (16:41 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு' சந்திரயான் 'மாதிரியை பரிசளித்த இஸ்ரோ தலைவர்

stalin -Isro Somnath
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.
 

இந்தியாவின் சாதனையை  உலக நாடுகள் பாராட்டின. இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமான சந்திரனில் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக இந்த நாளை விண்வெளி  தினமாக கொண்டாடப்படும் என  மத்திய அரசு கூறியது.

இந்த  நிலையில், நிலவில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக ஆக்ஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவித்து மத்திய அரசு  நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது.

இந்த   நிலையில், இஸ்ரோ விண்வெளி அமைப்பின் தலைவர் சோம்நாத், தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, அவருக்கு சந்திரயான் 3 மாதிரியை பரிசளித்தார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இஸ்ரோவுக்கு தமிழக அரசு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் கூறியுள்ளது.